தேங்காய் எண்ணையில் சிறிதளவு கற்பூரம் சேர்த்து, நெஞ்சில் தேச்சா உடலில் நடக்கும் அதிசயம்
மனித உடலில் அடிக்கடி ஏற்படும் பல வகையான நோய்களை விரட்ட ஆங்கில வைத்தியத்தை நாடாமல் வீட்டில் கிடைக்கும் பொருளை கொண்டு குணப்படுத்த கூடிய சில இயற்கை வைத்தியங்களை இங்கே பார்ப்போம்.
நெஞ்சில் சளி கட்டி கொண்டு அவஸ்த்தை படுவோருக்கு அதை குணப்படுத்த தேங்காய் எண்ணையில் சிறிதளவு கற்பூரம் சேர்த்து நன்கு கொதிக்கவைத்து அவை ஆறியதும் நெஞ்சில் தடவி வந்தால் அந்த சளி பிரச்சினை காணமல் போய் விடும் என்று இயற்கை வைத்தியம் கூறுகிறது
கண்ட தைலம் தேச்சும் குணமாகாமல் தலை வலியால் அவதி படுவோர் துளசி இலை, சிறுதுண்டு சுக்கு மற்றும் 2 லவங்கம் ஆகியவற்றை நன்கு அரைத்து தலை வலியுள்ள இடத்தில் பற்றாக போட்டால் தலைவலி இருக்கிற இடம் தெரியாமல் மறைந்து போய் விடும்
பலருக்கு சைனஸ் பிரச்சினையால் தொண்டையில் கிச் கிச் மற்றும் கரகரப்பு ஏற்பட்டு தொல்லை கொடுக்கும் .
இதற்கு சுக்கு, வெள்ளை மிளகு மற்றும் திப்பிலி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிடுவது கை கண்ட வைத்தியம் ஆகும்
இன்னும் சிலர் விக்கல் நிற்காமல் அவதி படுவர் ,இதற்கு நெல்லிக்காயை இடித்து சாறு எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டால் போதும் உடனே சரியாகும்
சட்டியில் படிகாரத்தை போட்டு நன்கு காய்ச்சி, ஆறவைத்து தினமும் மூன்று வேலை சாப்பிட வாய் நாற்றம் குணமாகும்.
பலர் பனி காலம் வந்தால் போதும் உதடு வெடித்து அவதிப்படுவர் ,
இதற்கு கரும்பு சக்கையை எரித்து சாம்பல் எடுத்து அதை வெண்ணையில் கலந்து உதட்டில் தடவி வந்தால் போதும் சட்டுன்னு பறந்து போகும்
விருந்துக்கு போய் ஓவரா சாப்பிட்டு சிலருக்கு செரிமானம் ஆகாமல் அவதிப்படுவர் .
இதற்கு ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பில்லை, இஞ்சி மற்றும் சீரகம் ஆகியவற்றை நன்கு கொதிக்க வைத்து, ஆறியதும் வடிகட்டி குடித்தால் போதும் உடனே பசியெடுத்து அடுத்த விருந்துக்கு கிளம்பி விடலாம்
No comments:
Post a Comment