மத்திய அரசின் கல்வி உதவித்தொகை : சிறுபான்மையினர் விண்ணப்பிக்கலாம்- எப்படி பெறுவது?
புதியதாக
விண்ணப்பிக்கும் மாணவ
மாணவிகள் இணையதளத்தில்
எளிதாக விண்ணப்பிக்கும்
வகையில் அனைத்து கல்வி
நிலையங்களும் தங்களுடைய
UDISE/AISHE/NCVT குறியீட்டு
எண்ணை மாணவ/
மாணவியர்களுக்கு தெரிவிக்க
வேண்டும்.
தமிழ்நாட்டில் மத்திய அரசால்
சிறுபான்மையினராக
அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியர்,
கிறிஸ்துவர், சீக்கியர்,
புத்தமதத்தினர், பார்சி மற்றும்
ஜெயின் மதத்தை சார்ந்த அரசு,
அரசு உதவி பெறும் மற்றும் மத்திய /
மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட
தனியார் கல்வி நிலையங்களில்
2022-23 கல்வியாண்டில் ஒன்று
முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும்
மாணவ/மாணவியர்களுக்கு
பள்ளிப்படிப்பு கல்வி
உதவித்தொகையும், 11-ஆம் வகுப்பு
முதல் ஆராய்ச்சி படிப்பு வரை
(ஐடிஐ, ஐடிசி வாழ்க்கை
தொழிற்கல்வி, பாலிடெக்னிக்,
செவிலியர் / ஆசிரியர்
பட்டயப்படிப்பு, இளங்கலை,
முதுகலை பட்டப்படிப்புகள் உட்பட)
பயில்பவர்களுக்கு பள்ளி
மேற்படிப்பு கல்வி
உதவித்தொகையும் மற்றும்
தொழிற்கல்வி மற்றும்
தொழில்நுட்பக் கல்விபயில்பவர்களுக்கு தகுதி மற்றும்
வருவாய் அடிப்படையிலான கல்வி
உதவித்தொகை இணையதளத்தில்
(NSP) ஆன்லைன் மூலம்
விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
தகுதியான மாணவ, மாணவிகள்
பள்ளி படிப்பு கல்வி உதவித் தொகை
திட்டத்திற்கு 30.09.2022 வரையிலும்,
பள்ளி மேற்படிப்பு (ம) தகுதி மற்றும்
வருவாய் அடிப்படையிலான கல்வி
உதவித்தொகைக்கு 31.10.2022
வரையிலும் இந்திய அரசின்
www.scholarships.gov.in என்ற தேசிய
கல்வி உதவித்தொகை ஆன்லைன்
இணையதளத்தில்
(NSP)விண்ணப்பிக்கலாம்.
கல்வி
உதவித்தொகை இந்திய அரசின்
சிறுபான்மையினர் விவகார
அமைச்சகத்தால்' நேரடிபணப்பரிமாற்றம் மூலம் மாணவ
மாணவியர்களின் வங்கிக்கணக்கில்
நேரடியாக செலுத்தப்படும். இந்திய
அரசின் தேசிய கல்வி உதவித்தொகை
இணையத்தில் (NSP) ஏற்கனவே பதிவு
செய்யப்பட்டுள்ள கல்வி நிலையங்கள்
தங்களின் கல்வி நிலையத்திற்கான
ஒருங்கிணைப்பு அலுவலரின் (Nodal
officer) ஆதார் விவரங்களை இணைத்த
பின்னரே விண்ணப்பங்களை
இணையதளத்தில் சரிபார்க்க இயலும்.
புதியதாக விண்ணப்பிக்கும் மாணவ
மாணவிகள் இணையதளத்தில்
எளிதாக விண்ணப்பிக்கும் வகையில்
அனைத்து கல்வி நிலையங்களும்
தங்களுடைய UDISE/AISHE/NCVT
குறியீட்டு எண்ணை மாணவ/
மாணவியர்களுக்கு தெரிவிக்க
வேண்டும். திட்ட வழிகாட்டி முறைகள்,
இலக்கீடு, தகுதிகள், விதிமுறைகள் (ம)
நிபந்தனைகள், கல்வி
நிலையங்களுக்காக அவ்வப்போது
கேட்கப்படும் கேள்விகள் (FAQ).
இணையம் செயல்படும் முறை (ம) 202-
2023 ஆம் ஆண்டில் இணையத்தில்
ஏற்படுத்தப்பட்ட புதிய வசதிகள்
ஆகியவைகள் மேற்காணும்
இணையத்தளத்தில் தரப்பட்டுள்ளது.
பள்ளி மேற்படிப்பு தகுதி மற்றும்
வருவாய் கல்வி உதவித்தொகை
திட்டத்தின் கீழ் பயன் பெற தகுதியான
படிப்புகளின்
விவரங்களை https://www.minorityaffairs.gov.in/ இணையத்தளத்தில் காணலாம்.
தகுதியுள்ள அனைத்து கல்வி
நிலையங்களும் இக்கல்வி
உதவித்தொகை திட்டத்தில் பங்கு பெற
கல்வி நிலையங்களின்
ஒருங்கிணைப்பு அலுவலர் மற்றும்
கல்வி நிலையத்தலைவர் ஆதார்
விவரங்கள் தேசிய கல்வி
உதவித்தொகை இணையத்தில்
சரிபார்க்கப்படவேண்டியது
கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம்
தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு
சென்னை மாவட்ட ஆட்சியர்
அலுவலகம், எண்.32, சிங்கார வேலர்
மாளிகை, இரண்டாவது தளத்தில்
இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர்
மற்றும் சிறுபான்மையினர் நல
அலுவலகத்தை தொடர்பு
கொள்ளலாம்.
சிறுபான்மையின
மாணவ/மாணவியர்கள் மேற்படி கல்வி
உதவித்தொகையினை பெற உரிய
காலத்தில் ஆன்லைன் மூலம்
விண்ணப்பித்து பயனடையுமாறு
சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர்
தெரிவித்துள்ளார்.
Central Government Scholarship: Minorities Can Apply- How to Get?
All educational institutes should provide their UDISE/AISHE/NCVT code number to the students so that the fresh students can easily apply online.
Scholarship for schooling for students/students studying from Class 1 to 10 in the academic year 2022-23 in government, government aided and private educational institutions recognized by Central / State Government belonging to Muslim, Christian, Sikh, Buddhist, Parsi and Jain religion declared as minorities by Central Government, 11 - Applications for post-school scholarships for students from Class I to research studies (including ITI, ITC Life Vocational, Polytechnic, Nursing/Teaching Diploma, Undergraduate, Postgraduate) and Vocational and Technical Education students through Merit and Earnings Based Scholarship (NSP) website are welcome.
Eligible students can apply till 30.09.2022 for School Study Scholarship Scheme and for Post School (M) Merit and Income Based Scholarship till 31.10.2022 through the National Scholarship Online Portal (NSP) of Government of India at www.scholarships.gov.in.
The scholarship will be paid directly to the student's bank account through direct transfer by the Ministry of Minority Affairs, Government of India. Institutions already registered on the National Scholarship Network (NSP) of the Government of India can verify the applications online only after linking the Aadhaar details of the Nodal officer for their institution.
All educational institutes should provide their UDISE/AISHE/NCVT code number to the students so that the fresh students can easily apply online. Program Guide Methods, Targeting, Eligibility, Terms and Conditions, Frequently Asked Questions (FAQ) for Institutions.
Internet Operation Mode (M) 202- 2023 The new facilities established in the Internet are given in the above website. Details of eligible courses under School Merit and Earning Scholarship Scheme can be found at https://www.minorityaffairs.gov.in/ website.
It is mandatory for all the eligible educational institutes to verify the Aadhaar details of the Coordinating Officer and Head of the Educational Institutions on the National Scholarship Online to participate in this scholarship scheme.
For more details regarding this scheme contact
District Backward and Minority Welfare Office
No. 32, Singhara Velar House,
Second Floor,
Chennai District Collectorate.
The District Collector of Chennai has said that minority students should apply online in due time to get the above scholarship.
No comments:
Post a Comment