Release of Admit Card for 2nd Stage Undergraduate 'CUET' Examination ., 2வது கட்ட இளநிலை ‘கியூட்' தேர்விற்கான அட்மிட் கார்டு வெளியீடு - துளிர்கல்விசெய்தி

Latest

Search This Blog

Thursday, August 4, 2022

Release of Admit Card for 2nd Stage Undergraduate 'CUET' Examination ., 2வது கட்ட இளநிலை ‘கியூட்' தேர்விற்கான அட்மிட் கார்டு வெளியீடு


மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை மாணவர்கள் சேர்க்கைக்கு நடத்தப்படும் கியூட் எனப்படும் பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு ( CUET) இரண்டாம் கட்டத் தேர்விற்கான ஹால்டிக்கெட் விவரங்களை தேசிய தேர்வு முகமை (National Testing Agency ) வெளியிட்டுள்ளது.

மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை மாணவர்கள் சேர்க்கைக்கு நடத்தப்படும் கியூட் எனப்படும் பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு ( CUET) முதல் கட்டத் தேர்வு ஏற்கனவே நிறைவடைந்த நிலையில் தற்போது இரண்டாம் கட்டத் தேர்வு நாளை மறுதினம் (ஆகஸ்டு 4ந்தேதி) தொடங்குகிறது.

 இதற்கான அட்மிட் கார்டு வெளியாகி உள்ளது.மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை பட்டப்படிப்புகளில் சேருவதற்கான பொதுப்பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு ( CUET) ஜூலை 15 முதல் ஆகஸ்ட் மாதம் 20-ம் தேதி வரை இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது என தேசியத் தேர்வு முகமை முன்னதாக அறிவிப்பினை வெளியிட்டது.

 அதன் படி முதற்கட்டத் தேர்வு ஜூலை 15 முதல் 20-ம் தேதி வரை நடைபெற்றது. தற்போது இரண்டாம் கட்டத் தேர்வு ஆகஸ்ட் 4 முதல் 10-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான அட்மிட் கார்டு விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது.அதன்படி, இளநிலை கியூட் தேர்வு ஆகஸ்ட் 4-ம் தேதி தொடங்குகிறது. ஆகஸ்ட் 4, 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் தேர்வுகள் நடைபெற உள்ளது.

 தேர்வு எழுதும் மாணவர்கள், என்டிஏ அதிகாரப்பூர்வ இணையதளத்தில் டவுன்லோடு செய்து கொள்ளலாம். நாடு முழுவதும் உள்ள மத்தியபல்கலைக்கழகங்கள் மற்றும் அதன் கீழ் இயங்கும் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை படிப்புகளில் சேர 2022-23 கல்வி ஆண்டு முதல் பொது நுழைவுத் தேர்வு ( CUET) கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இளநிலை பட்டப் படிப்புக்கான (CUET) தேர்வு, தேசிய தேர்வுகள் முகமை (National Testing Agency ) மூலம் கணினி வழியில் தமிழ், இந்தி உட்பட 13 மொழிகளில் நடத்தப்படும் என்று மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்தது. இதற்கான இணையதள விண்ணப்ப பதிவு கடந்த ஏப்.7-ம் தேதி தொடங்கி மே 31-ம்தேதியுடன் நிறைவு பெற்றது.

No comments:

Post a Comment