உடல் எடையை சட்டென கரைக்க வேண்டுமா? இந்த பொடியை இப்படி குடித்தால் போதும்
பொதுவாக நம்முடைய வீட்டில் அஞ்சறை பெட்டியில் உள்ள சில பொருள்கள் இயற்கையிலேயே உடலில் உள்ள கொழுப்பு மற்றும் கழிவுகளை அகற்றி எடையை குறைக்கும் திறன் கொண்டவை.
அவற்றை முறையாகப் பயன்படுத்தினாலே எடையை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.
அந்தவகையில் உடல் எடையை சட்டென குறைக்க கூடிய அற்புத பொடி ஒன்றை இங்கே பார்ப்போம்.
தேவையான பொருள்கள்
சீரகம் - 4 ஸ்பூன்
சோம்பு - 4 ஸ்பூன்
ஓமம் - 4 ஸ்பூன்
கட்டி
பெருங்காயம் - 4 துண்டு (பொடியாக இருந்தால் 2 ஸ்பூன்)
செய்முறை
பெருங்காயத்தை தவிர மற்ற பொருள்களான சோம்பு, சீரகம், ஓமம் ஆகியவற்றை தனித்தனியே வெறும் வாணலியில் வறுக்க வேண்டும்.
கட்டி பெருங்காயத்தையும் அதேபோல வறுக்க வேண்டும். பொடியாக இருந்தால் அடுப்பை அணைத்த பின் சூடான வாணலியில் போட்டு வறுக்க வேண்டும். இல்லாவிடில் கருகிவிடும்.
மேற்கண்ட வறுத்த பொருள்கள் அனைத்தையும் ஆறவிட்டு மிக்சியில் போட்டு பொடியாக்கிக் கொள்ள வேண்டும்.
இந்த பொடி ஆறியதும் ஒரு பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள்.
காலையில் எழுந்ததும் பல் துலக்கிவிட்டு வெறும் வயிற்றில் இந்த பவுடரை உட்கொள்ள வேண்டும்.
ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் அளவுக்கு இந்த எடையை குறைக்கும் டயட் பொடியை சேர்த்து கலக்கி வெறும் வயிற்றில் குடித்து வர வேண்டும். சாலட் போன்றவற்றிலும் மேலே தூவி சாப்பிடலாம்.
No comments:
Post a Comment