வெந்தயம் அடிக்கடி உட்கொண்டு வருவதால் கிடைக்கும் சத்துக்கள் என்ன...?
ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கமும், உடற்பயிற்சி இல்லாமல் இருப்பதும் தான் சர்க்கரை நோய்க்கு காரணமாக கருதப்படுகிறது.
வெந்தயம் அடிக்கடி உட்கொண்டு வருபவர்களுக்கு ரத்தத்தில் கொழுப்பு படிவதை தடுத்து, பிற்காலத்தில் இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்படாமல் காக்கிறது.
உண்கின்ற உணவு செரிமானம் ஆவதில் பிரச்சனைகள் இருப்பவர்களுக்கு வெந்தயத்தை நன்றாக அரைத்து விழுதாக்கி, வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர செரிமான பிரச்சனைகள் நீங்கும்.
சர்க்கரை நோயை வராமல் தவிர்க்க ஆரோக்கியமான உணவு முறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.
அதை கட்டுப்படுத்தவும் சில உணவு பொருள்கள் நம் சமையலறையில் உள்ளது அதில் ஒன்று வெந்தயம் வெந்தய விதைகளில் உள்ள நார்ச்சத்துக்கள் செரிமானத்தை மெதுவாக்குகிறது.
கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் சர்க்கரை சத்தை குறைக்கவும் உதவுகிறது.
வெந்தய கீரைகளை அடிக்கடி உண்ண நீரழிவு ஏற்படாமல் தடுக்கும் ஏற்கனவே நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அதன் தீவிரத்தன்மையை கட்டுக்குள் கொண்டு வரும்.
ரத்தத்தில் கலந்துள்ள நச்சு பொருட்களை வெளியேற்றும் செயல்களை செய்வது சிறுநீரகங்கள்.
வெந்தயம் ஊற வாய்த்த நீரையோ அல்லது வெந்தையதை வேகவைத்த நீரையோ அருந்துபவர்களுக்கு சிறுநீரகங்களில் கற்கள் உருவாவதை தடுக்கும். மூத்திரக்கடுப்பு நீங்கி சிறுநீர் நன்கு பிரியும்.
No comments:
Post a Comment