வாட்ஸ் ஆப்: 3 புதிய தனியுரிமை அம்சங்கள்! - துளிர்கல்விசெய்தி

Latest

Search This Blog

Tuesday, August 9, 2022

வாட்ஸ் ஆப்: 3 புதிய தனியுரிமை அம்சங்கள்!

வாட்ஸ் ஆப்: 3 புதிய தனியுரிமை அம்சங்கள்! மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஸக்கர்பெர்க் வாட்ஸ் ஆப்-இல் 3 புதிய தனியுரிமை அம்சங்களை குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார். உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தும் முக்கிய சமூக வலைத்தளமான வாட்ஸ் ஆப் இருக்கிறது. பயன்பாட்டுக்கு மிகவும் எளிதாக இருப்பதால் தனிப்பட்ட விஷயத்திற்காக மட்டுமின்றி அலுவலக வேலை ரீதியாகவும் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. வாட்ஸ் ஆப் குழுவிலிருந்து ஒருவர் வெளியேறினால் குழுவிலுள்ள எல்லோருக்கும் தெரியப்படுத்தும் விதமாகத்தான் இதுவரை உள்ளது. 

தற்போது குழுவிலிருந்து வெளியேறினாலும் யாருக்கும் தெரியாமலே வெளியேறும் புதிய அம்சத்தினை வெளியிட்டுள்ளது. நேருக்கு நேர் பேசுவது போல பாதுகாப்பான அம்சத்தினை மேம்படுத்தவே இந்த புதிய அம்சங்களை வெளியிட இருக்கிறோம் என மார்க் ஜூக்கப்பெர்க் தெரிவித்துள்ளார். 3 புதிய தனியுரிமை அம்சங்கள்: குழுவிலிருந்து ஒருவர் வெளியேறும்போது குழு நபர்களுக்கு நோட்டிபிகேஷன் அனுப்பப்படாது. யாருக்கும் தெரியாமலே குழுவில் இருந்து வெளியேறலாம். நாம் ஆன்லைனில் இருப்பதை யார் பார்க்க வேண்டுமென்பதை நாம் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். ஒருமுறை மட்டுமே அனுப்பப்படும் செய்திகளை இனிமேல் ஸ்கிரின்ஷாட் எடுக்க முடியாது.

No comments:

Post a Comment