முடி உதிர்தலை தடுத்து முடி வளர்ச்சியை தூண்டும் 10 ஆயுர்வேத மூலிகைகள் - துளிர்கல்விசெய்தி

Latest

Search This Blog

Saturday, September 24, 2022

முடி உதிர்தலை தடுத்து முடி வளர்ச்சியை தூண்டும் 10 ஆயுர்வேத மூலிகைகள்

முடி உதிர்தலை தடுத்து முடி வளர்ச்சியை தூண்டும் 10 ஆயுர்வேத மூலிகைகள்:



 நம் கூந்தல் ஆரோக்கியத்தை மேம்படுத்த நாமும் நிறைய ஷாம்புகள், க்ரீம்கள் என செயற்கை கூந்தல் பராமரிப்பு பொருட்களை பயன்படுத்தி வருவது உண்டு. ஆனால் இந்த மாதிரியான கெமிக்கல்கள் நிறைந்த பொருட்களை விட மூலிகைகளை பயன்படுத்தி வருவது என்றும் நன்மை தரும். ஆயுர்வேதத்தின் படி, மூலிகைகள் நம் கூந்தல் ஆரோக்கியத்தில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. முடி வளர்ச்சியை தூண்டவும், முடி உதிர்தலை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. இதனால் நமக்கு எந்த பக்க விளைவுகளும் ஏற்படுவதில்லை.


 இந்த மூலிகைகளில் உள்ள பூஞ்சை எதிர்ப்பு பண்புகள், அழற்சி எதிர்ப்பு பண்புகள் கூந்தல் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது. கூந்தலை பளபளப்பாகவும் வலிமையாகவும் வைக்க உதவுகிறது. அதைப்பற்றி இக்கட்டுரையில் நாம் காண்போம். ​மருதாணி மருதாணி கூந்தலுக்கு ஒரு இயற்கையான முடி சாயமாக பயன்படுகிறது. இதன் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் தலையில் உள்ள பொடுகை அகற்ற உதவுகிறது. உச்சந்தலையில் உள்ள pH அளவை சமநிலையில் வைக்க உதவுகிறது. முன்கூட்டியே முடி உதிர்தல் மற்றும் நரைமுடி பிரச்சினைகளை தடுக்கிறது. மருதாணி பொடியை கூந்தலுக்கு பயன்படுத்தலாம். 

ஹேர் பேக் போடலாம். தலைக்கு பயன்படுத்தும் எண்ணெயில் இதை சேர்த்து பயன்படுத்தலாம். ​காட்டுத்துளசி துளசியின் வேர்கள் கடுமையான கூந்தல் பிரச்சினையான ஆண்ட்ரோஜெனிக் அலோபீசியா சிகிச்சைக்கு உதவுகிறது. இது 5 5-ஆல்ஃபா ரிடக்டேஸைத் தடுக்க உதவுகிறது. இது தான் ஆண்ட்ரோஜெனிக் அலோபீசியாவை ஏற்படுத்தும் என்சைம் ஆகும். துளசியின் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உச்சந்தலையில் உள்ள பிரச்சினைகளை போக்கவும், வீக்கத்தை தடுக்கவும் உதவுகிறது. இது முடியை வலுவாக்கவும், முடி உடைவதை தடுக்கவும் உதவுகிறது. இது இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. முடி வளர்ச்சியை தூண்டுகிறது.

 கூந்தலுக்கு பயன்படுத்தப்படும் எண்ணெயில் இதை சேர்த்து பயன்படுத்தலாம். ​சீகைக்காய் சீகைக்காயை பொதுவாக அந்தக் காலத்தில் இருந்து இந்தக்காலம் வரை கூந்தலுக்கு பயன்படுத்தி வருகின்றனர். உலர்ந்த சீகைக்காய் தூளை வெதுவெதுப்பான நீரில் கலந்து பேஸ்ட் செய்து உச்சந்தலையில் தடவிக் கொள்ள வேண்டும். இந்த பேஸ்ட்டை கொண்டு உச்சந்தலையை மசாஜ் செய்வது முடி வளர்ச்சியை ஊக்குவிக்க உதவுகிறது. இது ஒட்டுமொத்த கூந்தல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. கூந்தலை சுத்தப்படுத்துகிறது. சீகைக்காய் உடன் வெந்தயம் சேர்த்து கலந்து பொடியாக்கி கூந்தலை அலச பயன்படுத்தலாம். ​


நெல்லிக்காய் இந்திய நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகளவில் காணப்படுகிறது. இது கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கிறது. இது கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து முடி வளர்ச்சியை தூண்ட உதவுகிறது. நெல்லிக்காயை துண்டுகளாக நறுக்கிய நெல்லிக்காயை அரைத்து பேஸ்ட் ஆக்கி கூந்தலில் பயன்படுத்தலாம். நெல்லிதுண்டுகளை எண்ணெயில் போட்டு காய்ச்சி பயன்படுத்தினால் கூந்தல் உதிராது. நரைமுடியும் வராமல் தடுக்க லாம். ​ரோஸ்மேரி ரோஸ்மேரி ஆண்ட்ரோஜெனிக் அலோபீசியாவிற்கு சிகிச்சை அளிக்க உதவுகிறது. 

இது முடி உதிர்தலுக்கு சிகிச்சை அளிக்கிறது. எலிகளில் நடத்தப்பட்ட ஆய்வில் ரோஸ்மேரி எண்ணெய் முடி வளர்ச்சியை தூண்டுவது தெரிய வந்துள்ளது. முடி உதிர்தலுக்கு காரணமான ஹார்மோனான டிஹெச்டியை தடுக்க உதவுகிறது. ​ஜின்கோ பிலோபா ஜின்கோ பிலோபா உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து மயிர்க்கால்களுக்கு ஊட்டமளிக்க உதவுகிறது. இந்த மூலிகைகளில் உள்ள எத்தனால் முடி வளர்ச்சியை தூண்ட உதவுகிறது. ​செம்பருத்தி செம்பருத்தி பூவில் ஆன்டி ஆக்ஸிடன்கள் மற்றும் வைட்டமின்கள் அதிகளவில் காணப்படுகிறது. இது உச்சந்தலை மற்றும் முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. செம்பருத்தி பூவில் உள்ள ஹைட்ரோஆல்கஹாலிக் சாறு முடி வளர்ச்சியை தூண்டுகிறது. செம்பருத்தி இலைச் சாறும் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. ​ஜின்ஸெங் சீன சிவப்பு ஜின்ஸெங் 5-ஆல்ஃபா ரிடக்டேஸைத் தடுப்பதன் மூலமும், இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதன் மூலமும் அலோபீசியாவுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது. கூந்தலுக்கு ஊட்டமளிக்கவும், கூந்தலை வலுவாக வைக்கவும் ஒரு டானிக் மாதிரி செயல்படுகிறது. ​

கற்றாழை கற்றாழையில் புரோட்டியோலிடிக் என்சைம்கள் உள்ளன. இது உச்சந்தலையில் இருந்து இறந்த செல்களை அகற்றி முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. உச்சந்தலையில் உள்ள pH அளவை சமநிலையில் வைக்க உதவுகிறது. இது வீக்கத்தை குறைக்கவும், பொடுகுக்கு சிகிச்சை அளிக்கவும் உதவுகிறது. ​இராட்சத டாடர் (கொடியார் கூந்தல்) : இந்த கொடியார் கூந்தல் மூலிகை முடி உதிர்தலுக்கு சிகிச்சை அளிப்பது மட்டுமல்லாமல் முடி வளர்ச்சியை தூண்டவும் உதவுகிறது. கீமோதெரபியால் ஏற்படும் அலோபீசியாவிற்கு சிகிச்சை அளிக்க உதவுகிறது. இது கொடியார் கூந்தல் செயல்பாட்டை தடுக்க உதவுகிறது.

10 Ayurvedic Herbs That Stop Hair Fall and Promote Hair Growth 



 To improve the health of our hair we have been using many synthetic hair care products like shampoos and creams. But it is also beneficial to use herbs rather than such chemical-laden products. According to Ayurveda, herbs play a very important role in our hair health. Helps stimulate hair growth and control hair loss. It does not cause us any side effects. Anti-fungal properties, anti-inflammatory properties in these herbs put an end to hair problems. Helps keep hair shiny and strong. We will see about it in this article. Henna Henna is used as a natural hair dye for hair. Its anti-fungal properties help in getting rid of dandruff. Helps balance the pH level of the scalp. Prevents premature hair fall and gray hair problems. Henna powder can be used for hair.

 Put a hair bag. It can be added to the scalp oil. Wild basil Tulsi roots help in the treatment of androgenic alopecia, a serious hair problem. It helps inhibit 5 5-alpha reductase. This is the enzyme that causes androgenic alopecia. Tulsi's anti-inflammatory properties help to relieve scalp problems and prevent inflammation. It helps to strengthen the hair and prevent hair breakage. It increases blood flow. Stimulates hair growth. It can be added to hair oil. Chickpea Chickpeas have been commonly used for hair since that time. Dry chickpea powder should be mixed with warm water to make a paste and applied on the scalp. Massaging the scalp with this paste helps promote hair growth. It improves overall hair health. Cleanses the hair. Mix fenugreek seeds with chickpeas and use as a hair conditioner. Gooseberry Indian gooseberry is rich in Vitamin C. It increases collagen production. It helps stimulate hair growth by increasing collagen production. 


 Gooseberry can be ground into a paste and used on the hair. If you boil rice seeds in oil and use it, hair will not fall out. Let's prevent graying. Rosemary Rosemary helps treat androgenic alopecia. It treats hair fall. A study conducted on mice has shown that rosemary oil stimulates hair growth. Helps prevent DHT, the hormone responsible for hair loss. Ginkgo biloba Ginkgo biloba increases blood flow to the scalp and helps nourish the hair follicles. Ethanol in these herbs helps stimulate hair growth. Red cotton Hibiscus flower is rich in antioxidants and vitamins. 

It helps improve scalp and hair health. The hydroalcoholic extract of Hibiscus flower stimulates hair growth. Hibiscus leaf extract also promotes hair growth. Ginseng Chinese red ginseng helps treat alopecia by inhibiting 5-alpha reductase and improving blood circulation. A tonic model acts to nourish the hair and keep it strong. Cactus Aloe contains proteolytic enzymes. It removes dead cells from the scalp and promotes hair growth. Helps balance the pH level of the scalp. It helps reduce inflammation and treat dandruff. Giant Tatar (Flag Hair) : This kodiar hair herb not only treats hair loss but also stimulates hair growth. Helps treat alopecia caused by chemotherapy. It helps in preventing frizzy hair.

No comments:

Post a Comment