நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ‘விளாம்பழம்’
கடினமான தோல் பகுதியுடன் பந்து போல விளாம் பழம் காட்சியளிக்கும். ஓடு போல இருக்கும் இதன் மேல் பகுதியை உடைத்துதான், உள்ளிருக்கும் சதைப் பகுதியை சாப்பிட முடியும். மற்ற பழங்களைவிட கொஞ்சம் வித்தியாசமாக காட்சிதரும் இந்த விளாம் பழத்தில் ஏராளமான சத்துகள் அடங்கி இருக்கிறது.
அதை தெரிந்து கொள்வோமா..?
விளாம் பழம் ஆயுளை நீட்டிக்கும் தன்மையுடையது. சிறுவர்களுக்கு தினமும் சாப்பிட கொடுப்பதால் ஞாபக சக்தி அதிகரிப்பதுடன், நோய் எதிர்ப்பு சக்தியும் மேம்படுத்துகிறது. பசியை தூண்ட செய்து ஜீரண கோளாறுகளை சீர்செய்கிறது. ரத்தத்தை விருத்தி ஆக்குவதுடன், இதயத்தை பலம் பெறவும் செய்கிறது.
விளாம் பழத்தை அரைத்து முகத்தில் பூசி வர, வெயில் காலத்தில் இழந்த பொலிவு மீண்டும் வரும். புரதம் மற்றும் வைட்டமின் சி சத்தும், இரும்பு, சுண்ணாம்பு, வைட்டமின்-ஏ உள்ளிட்ட சத்துக்களும், இதில் நிறைந்துள்ளன. பழம் மட்டுமின்றி, அதன் மேல்புற ஓடு, மரத்தின் வேர், பட்டை, இலை ஆகியவற்றிலும் மருத்துவ குணம் உள்ளது. குறிப்பாக விளாம் பழ விதையில் ஒலியிக், பால்மிடிக், சிட்ரிக் உள்ளிட்ட அமிலங்களும், இலையில் சபோரின், வைடெக்சின் உள்ளிட்ட வேதி பொருட்களும், பட்டையில் பெரோநோலைடு உள்ளிட்ட மருத்துவ குணங்களும் உள்ளது. விளாங்காயில் பி-2 உயிர்சத்தும் உள்ளது.
No comments:
Post a Comment