கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் தக்காளி வைரஸ் பரவி வரும் நிலையில் இது குழந்தைகளை அதிகம் தாக்குவதாக உலக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
உடலில் சிகப்பு நிறத்தில் ஏற்படும் கொப்புளங்கள் தக்காளி காய்ச்சல் எனப்படுகிறது. சமீபமாக இந்த காய்ச்சல் இந்தியாவில் கேரளா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் கண்டறியப்பட்டுள்ளது.
உலக அளவில் பல நாடுகளில் தக்காளி காய்ச்சல் அறிகுறிகள் பலருக்கு கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில் தக்காளி வைரஸ் குறித்து பிரபல மருத்து ஆய்வு இதழான லான்செட் சில தகவல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி தக்காளி வைரஸ் குறிப்பாக குழந்தைகளை அதிகம் தாக்குவதாக தெரிய வந்துள்ளது.
கேரளாவில் இதுவரை 82 குழந்தைகளும், ஒடிசாவில் 26 குழந்தைகளும் தக்காளி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
முதலில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளையே இந்த வைரஸ் அதிகம் தாக்கும் என கூறப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்தியாவில் 9 வயதிற்குட்பட்ட குழந்தைகள் அதிக அளவில் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
இந்த வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவக்கூடியது என்பதால் பெற்றோர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும், குழந்தைகளுக்கு காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவமனையை அணுகவும்
அறிவுறுத்தியுள்ளனர் மருத்துவ நிபுணர்கள்.
Tomato fever targeting children! – Medical experts alert!
As the tomato virus is spreading in states including Kerala, the world's medical experts have warned that it is affecting children more.
Red blisters on the body are called tomato fever. Recently, this fever has been detected in states like Kerala and Odisha in India. Many people have been diagnosed with tomato flu symptoms in many countries around the world.
In this case, the famous medical journal Lancet has published some information about tomato virus.
Accordingly, it has been found that tomato virus especially affects children more. So far 82 children in Kerala and 26 children in Odisha have been affected by tomato fever.
Initially, it was said that this virus affects children below the age of 5, but now it has been revealed that children below the age of 9 in India are affected by this virus to a large extent.
Medical experts have advised parents to be very careful as this viral fever can spread rapidly and if their children show symptoms of fever, they should go to the hospital immediately.
No comments:
Post a Comment