ஆயுளை அதிகரிக்கும் இஞ்சி! - துளிர்கல்விசெய்தி

Latest

Search This Blog

Friday, September 30, 2022

ஆயுளை அதிகரிக்கும் இஞ்சி!

ஆயுளை அதிகரிக்கும் இஞ்சி! 
மருத்துவ மகத்துவம் கொண்ட இஞ்சியை தினமும் உணவில், சட்னி, பொங்கல் சேர்த்து பயன் பெறலாம். அப்படி செய்வதன் மூலம் உணவே மருந்தாகிவிடும். சக்தி நிறைந்த இஞ்சியின் தோல் பகுதி மட்டும் நஞ்சு போன்றது. தோலை நீக்கிவிட்டுத்தான் இஞ்சியை பயன்படுத்த வேண்டும். பசியின்மை, வாந்தி, குமட்டல், அஜீரணம் போன்றவைகளை போக்கும் சக்தி இஞ்சிக்கு உண்டு. இது ஆன்டி ஆக்சிடென்ட் ஆக செயல்பட்டு ஆயுளை அதிகரிக்கவும் செய்யும்.

 இஞ்சிக்கு அஞ்சாதது எதுவுமே இல்லை, என்பது சித்த மருத்துவர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை. எந்த மாதிரியான நோயாக இருந்தாலும் அதற்கான மருந்தில் பெரும்பாலும் இஞ்சி இடம்பிடித்துவிடும். அது இஞ்சியாக இருக்கும்போது மருத்துவத்துக்குப் பயன்படுவதைவிட, காய்ந்து 'சுக்கு' என்றான பிறகுதான் பயன்பாடு அதிகம்.


 இஞ்சிக்கு உஷ்ணப்படுத்தும் குணம் உண்டு என்றாலும் கபம், வாதம், சிலேத்துமம் போக்குகிறது. இஞ்சிக்கு, ஞாபக சக்தியை அதிகரிக்கும் குணம் அதிகமுண்டு. குடலில் சேரும் கிருமிகளை அழித்துவிடும். கல்லீரலை சுத்தப்படுத்துகிறது. மலச்சிக்கல், வயிற்றுவலி ஏற்பட்டால் இஞ்சிச்சாறில் சிறிது உப்பு கலந்து பருக வேண்டும். 

 பசி எடுக்காதவர்கள் இஞ்சியுடன் கொத்தமல்லி துவையல் அறைத்து சாப்பிட்டால் நன்கு பசி எடுக்கும். ஜலதோஷம் பிடித்தால் இஞ்சி கசாயம் போட்டு குடித்தால் குணமாகும். தொண்டை வலி போன்ற நோய்களுக்கு அருமருந்தாகும். பித்தம் அதிகமாகி தலைசுற்றல், விரக்தி ஏற்படுவதுண்டு. சுக்குத் தூளை தேனில் கலந்து சாப்பிட்டால் குணமாகும்.

 இஞ்சியை அளவுக்கு அதிகமாக உட்கொள்ளக்கூடாது. தினமும் 5 மி.லி. அளவு சாறை, தேனுடன் கலந்து பருகவேண்டும். அல்லது தோல் நீக்கிய இஞ்சியை சிறு துண்டுகளாக்கி தேனுடன் கலந்து தேன் ஊறலாக சாப்பிட வேண்டும். காலையில் இதை சாப்பிட்டால் நாள் முழுக்க ஜீரணம் நன்றாக இருக்கும். இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். 


உடம்பு இளைக்கும். இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும். இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும். இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீரணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும். இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம் இரைச்சல் தீரும். காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். 

Ginger to increase life! Medicinal ginger can be used daily in food, chutney and Pongal. By doing so, food itself becomes medicine. Only the skin part of the powerful ginger is similar to the pulp. Ginger should be used only after removing the skin. Ginger has the power to cure appetite, vomiting, nausea, indigestion etc. It also acts as an antioxidant and increases longevity. It is the unshakable belief of Siddha doctors that there is nothing to fear from ginger. Ginger is often found in the medicine for any kind of illness. 

It is used more after it is dried and called 'Suku' than when it is ginger, it is used medicinally. Although ginger has warming properties, it relieves phlegm, vadam and siletum. Ginger has great memory enhancing properties. It destroys the germs in the intestines. Cleanses the liver. In case of constipation and stomachache, mix some salt in ginger juice and drink it. People who are not hungry will feel hungry if they eat it with ginger and coriander rinse. If you have a cold, ginger decoction will cure it. A remedy for diseases such as sore throat. Bile increases and dizziness and despair occur. If you mix sugar powder with honey and eat it, it cures.

 Ginger should not be consumed in excess. 5 ml daily. Drink juice mixed with honey. Or take peeled ginger in small pieces and mix it with honey to make honey pickle. If you eat this in the morning, you will have good digestion throughout the day. A mix of Ginger juice and Milk would cure stomach disorders. Relaxes the body. Constipation, fatigue and chest pain will be relieved by eating ginger wash and tart. Mix ginger juice with jaggery to get rid of rheumatism and get stronger. Ginger mixed with mint and washed and eaten will cure bile, indigestion and bad breath. There will be convulsions. Eating ginger after washing it will relieve stomach rumbling. Mix ginger juice with salt in the morning and eat it for three days to relieve dizziness and constipation.

No comments:

Post a Comment