அண்ணா, பெரியார் பிறந்த நாட்களில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சு போட்டி தமிழக அரசு அறிவிப்பு - துளிர்கல்விசெய்தி

Latest

Search This Blog

Tuesday, September 13, 2022

அண்ணா, பெரியார் பிறந்த நாட்களில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சு போட்டி தமிழக அரசு அறிவிப்பு

அண்ணா, பெரியார் பிறந்த நாட்களில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சு போட்டி தமிழக அரசு அறிவிப்பு 

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ் வளர்ச்சித் துறைக்கான 2021-2022-ம் ஆண்டு மானியக் கோரிக்கை அறிவிப்பின்படி, அண்ணா பிறந்தநாளான வருகிற 15-ந்தேதி பள்ளி மாணவர்களுக்கு 1.தாய் மண்ணிற்கு பெயர் சூட்டிய தனயன், 2.மாணவர்களுக்கு அண்ணா, 3.அண்ணாவின் மேடைத்தமிழ், 4.அண்ணா வழியில் அயராது உயரும்!, 5.அண்ணாவின் வாழ்விலே என்ற தலைப்புகளிலும், கல்லூரி மாணவர்களுக்கு 1.அண்ணாவும் தமிழக மறுமலர்ச்சியும், 2.அண்ணாவின் மனிதநேயம், 3.அண்ணாவின் தமிழ் வளம், 4.அண்ணாவும் தமிழ் சமுதாயமும், 5.அண்ணாவின் அடிச்சுவட்டில் என்ற தலைப்புகளிலும் பேச்சுப்போட்டிகள் நடைபெறுகிறது. 
 மேலும், பெரியார் பிறந்தநாளான வருகிற 17-ந்தேதி பள்ளி மாணவர்களுக்கு 1.பெண்ணடிமை தீருமட்டும், 2.தந்தை பெரியாரின் வாழ்க்கையிலே, 3.தந்தை பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனைகள், 4.பெரியாரின் உலக நோக்கு என்ற தலைப்புகளிலும், கல்லூரி மாணவர்களுக்கு 1.பெண் ஏன் அடிமையானாள்?, 2.இனிவரும் உலகம், 3.சமுதாய விஞ்ஞானி பெரியார், 4.உலகச் சிந்தனையாளர்களும் பெரியாரும், 5.பெரியார் காண விரும்பிய சமூகநீதி, 6.மூட நம்பிக்கை ஒழிப்பில் தந்தை பெரியார் என்ற தலைப்புகளிலும் பேச்சுப்போட்டிகள் நடைபெறுகின்றன. வெற்றி பெறும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு முறையே முதல் பரிசு ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.3 ஆயிரம், 3-ம் பரிசு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். மேலும் சிறப்பு பரிசாக அரசுப்பள்ளி மாணவர்கள் 2 பேருக்கு தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment