பிஞ்சு கத்தரிக்காய் உண்பதால் அலர்ஜி ஏற்படுமா? - துளிர்கல்விசெய்தி

Latest

Search This Blog

Friday, September 30, 2022

பிஞ்சு கத்தரிக்காய் உண்பதால் அலர்ஜி ஏற்படுமா?

பிஞ்சு கத்தரிக்காய் உண்பதால் அலர்ஜி ஏற்படுமா? 





கத்தரிக்காய் வெள்ளை, ஊதா, கறுப்பு போன்ற நிறங்களில் காணப்படுகின்றது. மேலும் இரும்புச்சத்து, புரதம், நார்ச்சத்து கார்போஹைடிரேட், பாஸ்பரஸ், கால்சியம், நிறைந்துள்ளது. வைட்டமின் அதிகமாக இருப்பதால் நாக்கில் ஏற்படும் அலர்ஜியினைப் போக்குவதில் முக்கிய பங்காற்றுகிறது.

 வாதநோய், ஆஸ்துமா, ஈரல் நோய்கள், கீல்வாதம், சளி, பித்தம், தொண்டைக்கட்டு, மலச்சிக்கல், கரகரப்பான குரல், உடல் பருமன் முதலியவற்றைக் குணப்படுத்தும் காய்கறிகளுள் கத்தரிக்காயும் ஒன்று. கத்தரிக்காய் பிஞ்சாகச் சாப்பிடுவதே நல்லது. முற்றிய பெரிய காய்களைச் சாப்பிட்டால் உடம்பில் அரிப்பு ஏற்படும். 


குறிப்பாக, வீட்டிலே வளர்த்துப் பிஞ்சாகப் பறித்துச் சாப்பிட வேண்டிய காய்களுள் இதுவும் ஒன்றாகும். தக்காளிக்கு இணையானது. இவற்றை ஈடுசெய்யும் வகையில் வைட்டமின் ‘பி’ தக்க அளவில் உள்ளது. இதனால் நாம் சாப்பிடும் மற்ற உணவுகள் உடனடியாகச் சிதைந்து சத்தாக மாறக் கத்தரிக்காயில் உள்ள வைட்டமின் ‘பி’ பயன்படுகிறது. முற்றிய காய்கள் உடல் வளர்ச்சிக்குப் பயன்படும். காரணம், இவற்றில் வைட்டமின் ‘ஏ’ அதிக அளவில் இருக்கிறது. ஆனால், அளவாகத்தான் பயன்படுத்தவேண்டும். இதனால் கண்பார்வைத் திறனும் அதிகரிக்கும்.

 கத்தரி வற்றலும் உடம்பில் சூட்டை ஏற்படுத்தும். நீர்க்கனத்தைக் குறைக்கும். உடல் பருமனைக் குறைக்கும். உடம்பில் சொறி சிரங்கு, புண் உள்ளவர்கள் கத்தரிக்காயைத் தவிர்ப்பது நல்லது.

 Can you be allergic to eating eggplant?

 Eggplant is available in white, purple and black colors. Also rich in iron, protein, fibrous carbohydrates, phosphorus, calcium. Due to its high vitamin content, it plays an important role in curing allergies in the tongue. Cuttlefish is one of the vegetables that cures rheumatism, asthma, liver diseases, gout, colds, bile, sore throat, constipation, hoarse voice, obesity etc. Eggplant is best eaten as a pinch. 

If you eat large ripe fruits, your body will itch. In particular, this is one of the fruits that should be grown at home and eaten as a pinch. Similar to tomato. Vitamin 'B' is present in sufficient quantity to compensate for these. Due to this, the vitamin 'B' in eggplant is used to immediately break down other foods we eat and turn them into nutrients. 


Ripe pods are useful for body growth. The reason is that they are high in vitamin A. But, it should be used in moderation. This will increase the eyesight. Brinjal chili can cause heat in the body. Reduces water weight. Reduces obesity. People with rash, scabies and sores on the body should avoid eggplant.

No comments:

Post a Comment