அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப கோரிக்கை
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தை கடந்துள்ளது. இவ்வளவு காலிப்பணியிடங்களை வைத்துக்கொண்டு மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்க முடியாது என்பதை அறிந்திருந்தும் உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதது வருத்தம் அளிக்கிறது.
அரசு கல்லூரிகளின் நிலைமை இப்படி என்றால், அரசு உதவி பெறும் கல்லூரிகளின் நிலையும் மோசமாக உள்ளது. அரசு உதவி பெறும் கல்லூரிகளில் மொத்தமுள்ள 10,610 ஆசிரியர் பணியிடங்களில் சுமார் 3 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன.
இவற்றை நிரப்ப கல்லூரி நிர்வாகங்கள் தயாராக இருந்தும், அதற்கு தமிழக அரசின் உயர்கல்வித்துறை ஒப்புதல் வழங்கவில்லை. அதற்கான காரணம் புரியவில்லை.
எனவே அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணி இடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். அவ்வாறு நிரப்பும் போது 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் தகுதியுள்ள கவுரவ விரிவுரையாளர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment