Omam benefits: ஓம விதையை சுவாசித்தால் இவ்வளவு நன்மை இருக்கா..? அடடே..! இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே..? - துளிர்கல்விசெய்தி

Latest

Search This Blog

Thursday, September 1, 2022

Omam benefits: ஓம விதையை சுவாசித்தால் இவ்வளவு நன்மை இருக்கா..? அடடே..! இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே..?

Omam benefits: ஓமம் மனிதனுக்கு பல்வேறு விதங்களில் பலன் தருகிறது.. 



 பல்வேறு நோய்களை தீர்க்கும் இதன் மருத்துவ குணம் பற்றி உங்களுக்கு தெரிந்தால், கட்டாயம் இதை சாப்பிடுவதை மிஸ் பண்ணவே மாட்டீர்கள். இந்திய சமையல் அறையில் கட்டாயம் இடம்பெற்றிருக்கும், பொருட்களில் ஒன்று ஓமம் ஆகும்..ஓமம் மனிதனுக்கு பல விதங்களில் பயன்படுகிறது. 

 அஜீரணம் ஏற்பட்டால், ஓமம் விதைகளை வெந்நீருடன் உப்பு சேர்த்து சாப்பிடுவது நல்லது. இதுமட்டுமின்றி, சளி, இருமல் போன்றவற்றில் இருந்து விடுபடவும் உங்களுக்கு உதவுகிறது.. ஓமத்தை பொடி செய்து உபயோகித்தால், நீண்ட நாள் தலை வலியிலிருந்து விரைவாக நிவாரணம் கிடைக்கும். 

 1. காயத்தின் மீது சிவப்பு, நீல கறை இருந்தால், காயத்தின் மீது ஓமத்தை மற்றும் மஞ்சள் தூள் கட்டி வலி மற்றும் வீக்கம் குறைக்க உதவும். 

 2. வாயில் இருந்து துர்நாற்றம் ஏற்பட்டால், ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை ஓம விதைகளை தீயில் சுட்டு அந்த புகையை சுவாசித்து வந்தால் வாய் துர்நாற்றம் சரியாகிவிடும். அதுமட்டுமின்று, ஓமத்தில் உள்ள தைமால் என்ற மூலப்பொருள் இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகிறது.

 3. இது தவிர ஓமத்தை வறுத்து அரைத்து பொடி செய்யவும். இதனைக் கொண்டு துலக்கினால் ஈறுகளில் ஏற்படும் வலி மற்றும் வீக்கத்தில் நிவாரணம் கிடைக்கும். 

 4. கீல்வாதத்திலும் ஓமம் நிவாரணம் அளிக்கிறது. காய்ந்த இஞ்சியுடன் அரை கப் ஓம சாறு கலந்து குடிப்பதால் கீல்வாத நோய் குணமாகும்.இது உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவுகிறது 

 5. இது மூச்சுக்குழாய் குழாய்களை விரிவுபடுத்தவும் ,ஆஸ்த்மா நோயாளிகளின் நுரையீரலை பாதுகாக்கிறது 

 6. ஈறுகளில் வீக்கம், பல்வலி இருந்தால், ஓம விதைகளை தீயில் சுட்டு அந்த புகையை சுவாசித்து வந்தால் அதிலிருந்து உடனடி நிவாரணம் உண்டாகும். அதேபோன்று, வாய் கொப்புளம் போன்றவை இருந்தால், சில துளிகள் ஓமத்தை எண்ணெயைச் சேர்த்து வெதுவெதுப்பான நீரில் வாய் கொப்பளித்தால் நிவாரணம் கிடைக்கும்.

No comments:

Post a Comment