நாளை முதல் பிப். 1-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் - துளிர்கல்விசெய்தி

Latest

Search This Blog

Monday, January 30, 2023

நாளை முதல் பிப். 1-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

நாளை முதல் பிப். 1-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் 
 
சென்னை: நாளை முதல் பிப்ரவரி 1-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நிலநடுக் கோட்டை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அதே பகுதியில் நீடிக்கிறது. அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 21-22 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கை: இன்றும் மற்றும் நாளை தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகள், போமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

 From tomorrow Feb. Moderate rain likely till 1st: Meteorological Department Information

 CHENNAI: The Meteorological Department has announced that there is a possibility of moderate rain in Tamil Nadu, Puducherry and Karaikal from tomorrow to February 1. A low pressure area formed over the southeast Bay of Bengal along the equator continues in the same region. It is reported that during the next 24 hours, it will move in the west-northwest direction and strengthen as a deep depression area.

 Chennai and its suburbs will remain partly cloudy for the next 48 hours. According to the Meteorological Department, the maximum temperature will be around 30-31 degree Celsius and the minimum temperature will be around 21-22 degree Celsius. Warning to Fishermen: Cyclonic winds with a speed of 40 to 45 kmph and occasional speed of 55 kmph are likely to prevail over Southeast Bay of Bengal and adjoining areas, eastern Indian Ocean along the equator today and tomorrow.

No comments:

Post a Comment