ஆசிரியர் தகுதித் தேர்வு 2ம் தாளுக்கான கணினி வழித் தேர்வு, பிப்ரவரி 3 முதல் 14-ம் தேதி வரை நடைபெறும்: ஆசிரியர் தேர்வு
வாரியம் அறிவிப்பு
சென்னை: ஆசிரியர் தகுதித் தேர்வு 2ம் தாளுக்கான கணினி வழித் தேர்வு, பிப்ரவரி 3 முதல் 14-ம் தேதி வரை நடைபெறும்: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வு 2ம் தாளுக்கான ஹால்டிக்கெட், http://trb.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு 2022-ம் ஆண்டிற்கான ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-2 க்கான கணினி வழித் தேர்வுகள் (Computer Based Examination) ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 31.01.2023 முதல் 12.02.2023 வரை இருவேளைகளில் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. தற்போது 03.02.2023 முதல் 14.02.2023 வரையிலும் நடைபெற உள்ள கணினி வழித் தேர்விற்கான கால அட்டவணை (Schedule) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் இன்று வெளியிடப்படுகிறது.
தற்போது, தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அனுமதிச் சீட்டு-1 (District - Admit Card-I) இன்று 27.01.2023 முதலும் தேர்வு மையம் (இடம்) குறிப்பிடும் அனுமதிச் சீட்டு-2 (Venue - Admit Card-II) திட்டமிடப்பட்ட தேர்வு தேதிக்கு மூன்று நாட்களுக்கு முன்னதாகவும், ஆசிரியர் தேர்வு வாரிய இணையதள முகவரி www.trb.tn.nic.in ல் தேர்வர்கள் தங்களது User Id மற்றும் கடவுச் சொல் (Password) உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் கூறியுள்ளது
Computerized Examination for Teacher Eligibility Test Paper 2 will be held from February 3rd to 14th: Teacher Examination
Board Notification
CHENNAI: Computerized examination for Teacher Eligibility Test Paper 2 will be held from February 3rd to 14th: Teacher Examination Board has announced. Teachers Examination Board has announced that the hall ticket for Teacher Eligibility Test 2nd Paper has been published on the website http://trb.tn.nic.in.
Tamilnadu Teacher Eligibility Examination 2022 Teacher Eligibility Examination Paper-2 Computer Based Examination is proposed to be conducted by Teacher Examination Board in two sessions from 31.01.2023 to 12.02.2023. The schedule for the computer-based examination to be held from 03.02.2023 to 14.02.2023 is published today on the website of the Teacher Examination Board.
Currently, examination centers have been allotted and Admit Card-1 (District - Admit Card-I) is issued from today 27.01.2023 and Venue - Admit Card-II (Venue - Admit Card-II) three days before the scheduled date of examination, teacher exam The Teacher Examination Board has said that the candidates can enter their User Id and Password and download it from the board's website www.trb.tn.nic.in.
No comments:
Post a Comment