திருச்சி மாவட்டம் முழுவதும் பரவலாக சாரல் மழை
திருச்சி தமிழக கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில். திருச்சி மாநகரில் நேற்று காலை முதல் மாலை வரை வெயிலின் தாக்கம் குறைவாக காணப்பட்டது. மாலை 3.30 மணிக்கு மேல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு குளிர்ந்த காற்று வீசியது. பின்னர் மாநகர் முழுவதும் சாரல் மழை பெய்ய தொடங்கியது.
இந்த மழை மாலை 4 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை பெய்தது. மழையின் காரணமாக திருச்சி மாநகரம் இரவில் குளிர்ந்த சீதோஷ்ண நிலவியது. இதே போல் முசிறி, லால்குடி, மணப்பாறை உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. தா.பேட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மாலை வானில் கருமேகங்கள் சூழ்ந்த நிலையில் இரவு பரவலாக மழை பெய்தது. இதனால் குளிர்ந்த காற்று வீசியது. கடந்த 2 மாதங்களுக்கு பிறகு பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Scattered rain across Trichy district
Trichy, Tamil Nadu Coastal and Delta districts will receive moderate rains, according to Chennai Meteorological Department. At this stage. The effect of sun was less in Trichy city from yesterday morning till evening. After 3.30 pm the sky was overcast and cold wind was blowing.
Then it started raining all over the city. The rain started at 4 pm and lasted till 6 pm. Due to the rains, Trichy city experienced cool temperatures at night. Similarly, there was widespread rain in various places across the district including Musiri, Lalgudi, Manaparai. There was heavy rain in the night with black clouds in the sky yesterday evening. This caused a cold wind. Farmers are happy with rain after last 2 months.
No comments:
Post a Comment