பள்ளிகளில் பிளஸ்-2 விடைத்தாள் தைக்கும் பணி தீவிரம் - துளிர்கல்விசெய்தி

Latest

Search This Blog

Friday, February 24, 2023

பள்ளிகளில் பிளஸ்-2 விடைத்தாள் தைக்கும் பணி தீவிரம்

பள்ளிகளில் பிளஸ்-2 விடைத்தாள் தைக்கும் பணி தீவிரம் நாமக்கல்லில் பள்ளிகளில் பிளஸ்-2 விடைத்தாள் தைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

நாமக்கல் தமிழகத்தில் வருகிற மார்ச் மாதம் 13-ந் தேதி பிளஸ்-2 பொதுத்தேர்வும், 14-ந் தேதி பிளஸ்-1 பொதுத்தேர்வும் தொடங்குகிறது. நாமக்கல் மாவட்டத்தை பொறுத்த வரையில் 198 மேல்நிலைப்பள்ளிகளில் இருந்து பிளஸ்-2 தேர்வை இந்த ஆண்டு 19 ஆயிரத்து 877 பேரும், பிளஸ்-1 தேர்வை 17 ஆயிரத்து 810 பேரும் எழுத விண்ணப்பித்து உள்ளனர். இவர்களுக்கான செய்முறை தேர்வு மார்ச் 1-ந் தேதி தொடங்கி 10-ந் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. 

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலகத்தில் இருந்து பள்ளிகளுக்கு விடைத்தாள்கள் அனுப்பும் பணி நடைபெற்று வந்தது. தற்போது பள்ளிகளில் 'டாப் ஷீட்டுடன்' விடைத்தாள்களை இணைத்து தைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த பணி ஓரிரு நாட்களில் முடிந்து விடும் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment