குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப விழிப்புணர்வு ஏற்படுத்திய சப்-இன்ஸ்பெக்டருக்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு வாழ்த்து - துளிர்கல்விசெய்தி

Latest

Search This Blog

Sunday, April 30, 2023

குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப விழிப்புணர்வு ஏற்படுத்திய சப்-இன்ஸ்பெக்டருக்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு வாழ்த்து

குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப விழிப்புணர்வு ஏற்படுத்திய சப்-இன்ஸ்பெக்டருக்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு வாழ்த்து தெரிவித்து பாராட்டு பத்திரம் வழங்கினார். 


திருவள்ளூர் மதுரையை சேர்ந்தவர் பரமசிவம் (வயது 40). திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள பென்னாலூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் பயிற்சி சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். இவர் சில நாட்களுக்கு முன் பென்னாலூர்பேட்டை அருகே உள்ள திடீர் நகரில் சில குழந்தைகள் பள்ளிக்கு செல்லவில்லை என அறிந்தார். இதையத்து பரமசிவம் மலைவாழ் மக்களை சந்தித்து கல்வியின் அவசியத்தைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதனை அடுத்து 11 குழந்தைகள் அழைத்துக் கொண்டு பெற்றோர்கள் பென்னாலூர் பேட்டையில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் சேர்த்தனர். 

குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும்படி சப்-இன்ஸ்பெக்டர் விழிப்புணர்வு ஏற்படுத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனால் சப்-இன்ஸ்பெக்டர் பரமசிவனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. சில தினங்களுக்கு முன்னர் தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் இறையன்பு பரமசிவனை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்து வாழ்த்தினார். இந்த நிலையில் நேற்று தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு சப்-இன்ஸ்பெக்டர் பரமசிவனை சென்னைக்கு அழைத்து வாழ்த்து தெரிவித்து பாராட்டு பத்திரம் வழங்கினார்.

No comments:

Post a Comment