ஜிம் சென்று மசில் பில்ட் செய்பவர்கள் கட்டாயம் புரதம் சேர்த்துக்கொள்ள வேண்டும். அசைவத்தில் தான் புரதம் அதிகம் என்றில்லை, காய்கறிகள், பருப்பு வகைகளிலும் புரதத்திற்கான ஆதாரம் உண்டு. அப்படி புரதம் நிறைந்த 7 காய்கறிகள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.
உடலின் திசுக்களை கட்டமைக்க, சரிசெய்ய என அனைத்து உயிரணுக்களுக்கும் புரதம் ஒரு முக்கிய அங்கம். அது மட்டுமின்றி என்சைம்கள் மற்றும் ஹார்மோன்களை உற்பத்தி செய்யவும் புரதம் பயன்படுகிறது. எலும்பு, தசை, தோல் மற்றும் ரத்தத்தின் வளர்ச்சிக்கு அவற்றுக்கு ஆற்றலை கடத்தவும் புரதம் தேவை.
அனைத்து செல்களுக்கும் ஆக்ஸிஜனை வழங்குகிறது. மேலும், தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் தேவைப்படும் செல்களுக்கு கொண்டு செல்லவும் உதவுகிறது. உலக சுகாதார நிறுவனம், அமெரிக்க டயடிக் சங்கம் ஆகியவை நாளொன்றின் சராசரி புரதத் தேவை 50 கிராம் என கூறுகின்றன. காய்கறிகள் மூலமும் ஓரளவு புரதத் தேவையை நிறைவுச் செய்ய முடியும். அப்படிப்பட்ட சில காய்கறிகளின் பட்டியல் இதோ.
தாவர புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த ஒன்று பட்டாணி. இதில் கொழுப்பு குறைவு. மேலும் பட்டாணியில் மாங்கனீஸ், தாமிரம், பாஸ்பரஸ், ஃபோலேட், துத்தநாகம், இரும்பு மற்றும் மெக்னீசியம் ஆகிய சத்துக்கள் அதிகம் உள்ளன. வயிற்றுப் புற்றுநோயைத் தடுக்க உதவும் கூம்ஸ்ட்ரோல் போன்ற பைட்டோநியூட்ரியன்ட்களும் இதிலுண்டு. நீங்கள் உங்கள் உணவில் பட்டாணியை சேர்க்கவில்லை என்றால் இனி சேர்க்க துவங்குங்கள்.
சாலடுகள் மற்றும் பிற உணவுகளில் பட்டாணி சேர்த்து உண்ணலாம்.
ஆரோக்கிய விரும்பிகளின் தட்டுகளில் தற்போது தவறாமல் இடம்பெறுகிறது கேல் எனப்படும் பரட்டைக்கீரை. வெளிநாட்டினரும் இதனை சமைக்கின்றனர். இதுவும் தாவர புரதத்திற்கு சிறந்த ஆதாரம். இந்த கீரையில் ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்களும், வைட்டமின்கள் கே, சி, ஏ மற்றும் பி6, கால்சியம், பொட்டாசியம், மாங்கனீசு மற்றும் மெக்னீசியம் ஆகியவை உள்ளன. லுடீன் மற்றும் ஜியாக்ஸாந்தின் இருப்பதால் கண்புரையை தள்ளிப்போடச் செய்யும்.
ஸ்வீட் கார்ன் எனப்படும் மக்காச்சோளத்தில் கொழுப்பு குறைவாகவும், புரதம் அதிகமாகவும் உள்ளது, தினமும் உங்களுக்கு தேவையான புரதத்தில் 9 சதவீதத்தை பூர்த்தி செய்கிறது.
சோளத்தில் தியாமின், வைட்டமின்கள் சி மற்றும் பி6, ஃபோலேட், மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் மெக்னீசியம் உள்ளது. சாண்ட்விச்கள், சூப்கள் மற்றும் சாலட்டுகளில் சோளம் பயன்படுத்தலாம்.
எளிமையான காய்கறியான காலிபிளவரில் அதிக புரதச்சத்து உள்ளது. இதனை பல உணவு வகைகளில் பயன்படுத்தப்படலாம். காலிஃபிளவரில் பொட்டாசியம், மாங்கனீசு, மெக்னீசியம், பாஸ்பரஸ், கால்சியம், வைட்டமின்கள் சி மற்றும் கே, இரும்புச்சத்து உண்டு. இது தவிர சினிக்ரின் உள்ளது. இந்த குளுக்கோசினோலேட் எனப்படும் மூலக்கூறு புற்றுநோய் எதிர்ப்பு மற்றும் உள்வீக்க எதிர்ப்பு பணிகளைச் செய்யக்கூடும் என்கின்றனர்.
இது நார்சத்து மற்றும் புரதத்தை பல்வேறு வைட்டமின்கள் மற்றும் தாதுக்களுடன் இணைத்து உங்களுக்கு தருகிறது. ரத்த அழுத்தத்தைக் குறைப்பது, மூளையை விழிப்புடன் செயல்பட வைப்பது, புற்றுநோயை தடுப்பது என ஏகப்பட்ட நன்மைகளை கிளைகோஸ் கொண்டுள்ளதுபுரோக்கோலியில் அதிக புரதம், குறைந்த கொழுப்பு மற்றும் குறைந்த கலோரி உள்ளது. இது வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்களின் சிறந்த ஆதாரமாக விளங்குகிறது. ஃபோலேட், மாங்கனீசு, பொட்டாசியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின்கள் கே மற்றும் சி அனைத்தும் புரோக்கோலியில் காணப்படுகின்றன. இதில் உள்ள குளுக்கோசினோலேட்டுகள் புற்றுநோயை எதிர்க்கும்.
No comments:
Post a Comment