நிலவில் கால் பதித்த சந்திரயான்-3: பலன்கள் என்னென்ன?... - துளிர்கல்விசெய்தி

Latest

Search This Blog

Thursday, August 24, 2023

நிலவில் கால் பதித்த சந்திரயான்-3: பலன்கள் என்னென்ன?...

நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியதன் வாயிலாக, அமெரிக்கா, சீனா மற்றும் முந்தைய சோவியத் யூனியனுக்கு பின், நிலவில் தரை இறங்கிய நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. 

 சர்வதேச அளவில், விண்வெளி ஆராய்ச்சியில் மிகப் பெரிய சக்தியாக இந்தியா உருவெடுத்து உள்ளது.

விக்ரம் லேண்டரில் இருந்து இறங்கியுள்ள, 'பிரஜ்ஞான்' ரோவர், ரோபோ போன்றது. ஆறு சக்கரம், சோலார் பேனல், கேமரா இருக்கும். 500 மீட்டர் சுற்றளவுக்கு நிலவின் தரையில் ஊர்ந்து சென்று ஆய்வில் ஈடுபடும். நிலவின் தரைப்பரப்பு, என்னென்ன தனிமங்கள், நீர் பனிக்கட்டி உள்ளதா, நிலவின் வளிமண்டலம் பற்றி ஆய்வு செய்து பூமிக்கு அனுப்பும். ரோவர் நிலவின் மண்ணைக் குடைந்து அதிலிருந்து மாதிரிகளை எடுத்து, அதை தன்னிடம் உள்ள லேசர் கற்றைகள் வாயிலாக உடைத்து, என்ன தனிமங்கள் உள்ளன என்பது பற்றி ஆய்வு செய்யும். 

 எதிர்காலத்தில் நிலவில் மனிதன் குடியேறுவதற்கான முதல் படியாக இந்த வெற்றி அமைந்துள்ளது.

No comments:

Post a Comment